தந்தையின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும் சிம்பு!

His son Simbu and wife today decembar 5 joined the Tamil Nadu Film Producers Association headed by D Rajendran.

டி ராஜேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அவரது மகன் சிம்புவும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் டி ராஜேந்தர் அவர்கள் தலைமையில் உருவாகியுள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் இந்த சங்கத்தின் செயலாளரான என் சுபாஷ் சந்திரபோஸ், ஜேஎஸ்கே சதீஷ்குமார்,  பொருளாளர் கே ராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க நினைப்பதாகவும், பிபிஎஃப் போன்ற கட்டணங்களை நீக்கி வேண்டாத செலவுகளை தவிர்த்து குறைந்த முதலீட்டில் படம் எடுக்க உறுதுணையாக இருப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டுவோம் எனவும் ஓட்டி டி, எஸ்எம்எஸ் சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம் எனவும், பட வெளியீட்டின் போது ஏற்படும் சிக்கல்களை இயன்றவரை சுமூகமாக பேசித் தீர்க்க முடிவெடுப்போம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட திருமதி உஷா ராஜேந்தர், எஸ்டிஆர் சன் பிக்சர்ஸ் உரிமையாளரும் நடிகரும் ஆகிய சிலம்பரசன் ஆகியோர் இந்த சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளனர்.