புதிய கல்வி கொள்கைக்கு எதிராக இன்று தஞ்சையில் மாணவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் திரைப்பட நடிகை ரோகிணி அவர்கள் கலந்து கொண்டார்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
unknown nodeஇந்நிலையில்,புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மாணவர்கள் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் தமிழ் திரைப்பட நடிகையான ரோகினி அவர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர், பேசிய அவர் நாடு முழுவதும் அனைவர்க்கும் சமமான கல்வி இல்லாத சூழலில் இந்த புதிய கல்வி கொள்கை மனவர்க்ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.