டும்டும்டும்...ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சித்தார்த் – அதிதீ ராவ்.!

Siddharth - Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Siddharth - Aditi Marriage 1

Siddharth – Aditi Marriage:சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

unknown node

Siddharth – Aditi Marriage [File Image]இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. மேலும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் திருமணம் தொடர்பாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக லிவிங் உறவில் இருந்து வரும் சித்தார்த்தும் அதிதியும் தங்களுடைய உறவை ஒருபோதும் வெளிப்படுத்த வில்லை என்றாலும், அவர்கள் பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். தெலுங்கு படமான ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பில் சித்தார்த் அதிதியை சந்தித்ததாகவும், படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

unknown node

Siddharth – Aditi Marriage [File Image]

இரண்டாம் திருமணம்

சொல்லப்போனால், இது சித்தார்த்துக்கு இரண்டாவது திருமணமாகும். ஆம், தனது சிறுவயது தோழியான மேக்னாவை மணந்த சித்தார்த், 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். அதே போல், இது அதிதிக்கும் இரண்டாவது திருமணம், இதற்கு முன்பு சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கடந்த 2012-ல் அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.