44 வயதிலும் யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி

Default Image

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும்.

ஒரு பேரழகியாக இந்தி உலகில் வளம் வருபவர் ஷில்பா ஷெட்டி.இவருக்கு வயது 44 ஆகும் .குறிப்பிட்ட ஸ்டைல் மற்றும் மனோபாவத்தின் மூலம் அவர் தனக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் பதித்து வைத்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், அவரை ஒரு குழந்தைக்கு தாய் என்று சொன்னால் நம்புவது கடினம் தான்.
அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.யோகா செய்வது எப்படி? என்பது குறித்து அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்த்தன.இவர் செய்த யோகா வீடியோ இன்ஸ்டாகிராம்,ட்விட்டர்,போன்ற சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டு பெரும் வரவேற்பு பெற்று பிரபலமாகி வருகிறார்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்