ஷங்கர் – ராம்சரண் பட பூஜை.! கலந்து கொண்ட பிரபலங்கள்.!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆர்சி 15-என தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பூஜையுடன்  இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பூஜையில், இயக்குனர் ராஜ மௌலி, ஷங்கர்,ராம்சரண், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், கியாரா அத்வாணி, தமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்த படத்திற்கான முதல் பார்வையும் வெளியாகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

unknown node