ரெடியானது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி

மக்கள் செல்வன்விஜய் சேதுபதிநடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி விடுகிறார். அவர் நடிப்பில்ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் கடைசியாக நடித்த 96 படம் கூட இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாகசீதக்காதிஎனும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தைநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்பட இயக்குனர்பாலாஜி தரணீதரன்இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் பார்வையில் விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்கள் பலரை கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் சென்சார் செய்யப்பட்டு அதற்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் யூ (U ) சான்று கிடைத்துள்ளது.. இப்படத்தின் வெளியீட்டு தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU