உன் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்! உன் துணிச்சலை தலைவணங்குகிறேன்! – சூர்யாவிற்கு சத்யராஜ் வாழ்த்து!

Default Image

நடிகர் சூர்யா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘ நான் உன்னை ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் போன் செய்தோ, குருஞ்செய்தி அனுப்பியோ, நேரில் பார்த்தோ வாழ்த்து தெரிவித்துள்ளான்.

அனால் இந்த வருடம் உன் உன் மீது மரியாதை அதிகமாகிவிட்டது. நுனி புல் மேய்ந்து மேலோட்டமாக குற்றம் சொல்லாமல், நன்கு ஆராய்ந்து, தெளிவாக தனது கருத்தை தெளிவாக கூறியுள்ளாய். வயதிலே மூத்தவன் என்பதால் உனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளேன். உனது கருத்துக்கு தலைவணங்குகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்