சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இப்படத்தில் காமெடி வேடத்தில் சதீஸ் மற்றும் சூரி என பலர் நடிக்கின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரஜினியின் 168வது படமாக உருவாகி வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிகர் சூரி மற்றும் சதீஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்து வரும் சதீஸ் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வாழ்வின் மிகச்சிறந்த புத்தாண்டு என் தலைவருடன்.உங்களை பார்த்து தான் வளர்ந்தோம். இன்று உங்களுடனேயே இருக்கிறோம். என்றும் உங்களுடன் இருப்போம்..’ என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
unknown node