ஞானவேல் ராஜா வன்மமான வார்த்தைகள் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுங்க! வேண்டுகோள் விடுத்த சசிகுமார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஞானவேல் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75

gnanavel raja sasikumar ameer

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஞானவேல் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார்.

பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், இயக்குனர் அமீர் கடந்த சில நாட்கள் ஒன்னுமே பேசாமல் இருந்ததால் செய்தியாளர்கள் ஊடகங்கங்கள் அவர் பேட்டி கொடுத்து உண்மை என்னவென்பதை கூறவேண்டும் என கூறியிருந்தது.

அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து இயக்குமார் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ““பருத்திவீரன்” படம் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். எனவும்,

ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை.அனைத்தும், பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே” என கூறியிருந்தார்.

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

இந்த நிலையில் ஏற்கனவே அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்த சசிகுமார் ” அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது, ” அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்” என கூறியுள்ளார்.