சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை […]
சென்னை : கொட்டுக்காளி படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்து இருக்க மாட்டேன் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். வாழை படத்துடன் ரிலீசான சூரியின் கொட்டுக்காளி படம் வாழை படத்தின் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு பாசிட்டிவான வரவேற்பை பெற்று வருகிறது. கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே, 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் […]
அமீர் : போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகிய இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விசாரணை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த போதைப்பொருள் வழக்கில் ஜாபர் […]
சென்னை : தனுஷ் வற்புறுத்தியதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன் என இயக்குனர் அமீர் உண்மையை உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அமீர் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார். நடிப்பில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் எது என்றால், அமீர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை கூறலாம். இந்த படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு நடிகராக வரவேற்பை […]
Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், ஜாபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக் உடனான தொடர்பின் அடிப்படையில் சென்னை தியாகராய நகர் பாண்டிபசாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]
Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் […]
Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.! இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் […]
சினிமா துறையில் தற்போது ட்ரெண்டிங்கான விஷயங்களில் ஒன்று ஆரம்ப காலகட்டத்தில் வெளியான படங்கள் தற்போது ரிலீஸ் செய்யப்படுவது தான். குறிப்பாக 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், காக்க காக்க, உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பருத்திவீரன் திரைப்படம் […]
ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பலரும் இன்னும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அமீர் பற்றி பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியீட்டு இருந்தாலும் கூட அவர் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள். அப்படி இருந்தும் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்காமல் இருந்து வருகிறார். இதனால் பலரும் […]
இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் இதே தினத்தில் (டிசம்பர் 13)-ஆம் தேதி தான் 2002-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், அஞ்சு மகேந்திரன், நேஹா பென்ட்சே, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் […]
இயக்குனராக ஒரு பக்கம் கலக்கி வந்த இயக்குனர் அமீர் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் வழங்கும் மாயவலை படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த மாயவலை திரைப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படத்தில் இயக்குனர் அமீருடன் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் […]
பருத்திவீரன் சர்ச்சை இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், இயக்குனர் அமீர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பருத்திவீரன் சர்ச்சை பற்றிய உண்மை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதனை அறிக்கையாகவும் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவித்துக்கொள்ள இந்த நேரத்தில் நான் விரும்புகிறேன். சென்னையில், கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த […]
இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களை இயக்கி தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதனை நிரூபித்துவிட்டார். அதே சமயம் யோகி, ஆதிபகவன், வடசென்னை, மாறன் ஆகிய படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதனையும் காட்டிவிட்டார். இதில் அவர் வடசென்னை படத்தில் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இப்படி நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் அமீர் தற்போது […]
மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு […]
பருத்திவீரன் படம் இந்த அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று தெரியாமல் அமீர் பற்றி ஞானவேல் ராஜா பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் உலாவி கொண்டு இருந்தது. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே, கார்த்தியை வைத்து பருத்திவீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அமீர். இவர் இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அந்த சமயம் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அமீர் எந்த படத்தையும் இதுவரை இயக்கவில்லை. அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் […]
இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே பிரச்சனை இருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீர் பற்றி திருடன் என கடுமையாக ஞானவேல் ராஜா விமர்சித்து பேசியதன் காரணமாக இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை வெளியீட்டு […]
ஞானவேல் ராஜா அமீர் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஞானவேல் ராஜா சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும் சமுத்திரகனி சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் போலியான , வருத்தம் தெரிவிப்பதெல்லாம் விஷயமில்லை சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத […]
பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கடுமையாக தாக்கி பேசியது தான். கணக்கு விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து, ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை […]
அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், […]