நடிகர் விஜய் – முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
unknown nodeகடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். போராட்ட பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் படத்தின் கொண்டாட்டமாக இந்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
SONG வீடியோ
unknown nodeDINASUVADU