சரவணன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை அமைத்து உள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது சொந்த நிறுவன விளம்பரகளில் நடித்து வந்தார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார் . இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.
unknown nodeபிரபு, நாசர், விவேக், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த பாடல் காட்சிக்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த பாடல் கட்சிக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டி உள்ளனர்.இதையடுத்து அந்த பிரமாண்ட செட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.