கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!
Sarathkumar நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் சரத்குமாருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூறலாம். வில்லன் கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரம் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி கொண்டு இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்தார்கள். அந்த அளவிற்கு இவர் தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றே சொல்லலாம்.
read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நாட்டாமை படம் வெளியான சமயத்தில் எல்லாம் சரத்குமார் மார்க்கெட் பெரிய உச்சத்தில் இருந்தது. அந்த சமயம் எல்லாம் இவருக்கு பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததது. இருந்தாலும் அந்த சமயம் அப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோதே சரத்குமார் பெரிய விஷயம் ஒன்றை செய்து இருக்கிறார்.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
நாட்டாமை படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சரத்குமாரை சந்தித்து மகாபிரபு படத்தின் கதையை கூறினாராம். படத்தின் கதையை 10 நிமிஷம் கேட்டவுடன் கதை பிடித்து இருக்கிறது என்று கூறினாராம். ஆனால், கொஞ்சம் படத்தில் நடிக்க தாமதமாகும் என்று கூறினாராம்.ஆனால், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஏற்கனவே பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்தை கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்தாராம்.
எனவே, எனக்கு ஒரு 21 நாட்கள் கால்ஷீட் கொடுத்தீர்கள் என்றால் நான் முடித்துவிடுவேன் என்று சரத்குமாரிடம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறினாராம். ஆனால், முதலில் சரத்குமார் இல்லை நான் ஏற்கனவே 4 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதனை கேட்டவுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கண்கலங்கி பேசிக்கொண்டு இருக்கும்போதே அழுதுவிட்டாராம்.
read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?
இதனை பார்த்தவுடனே சரத்குமார் அழாதீங்க நான் உங்களுக்கு 16 நாட்கள் கொடுக்கிறேன் முடித்துவிடுவீர்களா? என்று கேட்டாராம். உடனே இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கண்ணை தொடைத்து கொண்டு மகா பிரபு படத்தை மின்னல் வேகத்தில் முடித்தாராம். மகா பிரபு படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியானது. படமும் சுமாரான வரவேற்பை பெற்றது.
read more- 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!
இருந்தாலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய முதல் திரைப்படம் மகா பிரபு தான் அவர் இதற்கு முன்பு பெரிய அளவில் படங்களை கூட இயக்கவில்லை இருந்தாலும் அவ்வளவு பெரிய பீக்கில் இருந்த நேரத்தில் கண்கலங்கி வாய்ப்பு கேட்ட இயக்குனருக்கு சரத்குமார் கால்ஷீட் கொடுத்து உதவி செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . ஏ.வெங்கடேஷ் தமிழ் சினிமாவில் செல்வா, டம், குத்து, ஏய் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.