பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ரசிகை ஒருவர், அவரின் சொத்துக்களை தமக்கு உயிலாக எழுதி வைத்ததை கண்டு, நெகிழ்ந்து போனதாக கூறியுள்ளார். மும்பையில் வசித்த 62 வயதான நிஷி திரிபாதி என்பவர், கடந்த ஜனவரியில் உயிரிழந்தார்.
நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையான இவர், தமது வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை சஞ்சய் தத்தின் பெயரில் உயில் எழுதி வைத்தது தெரியவந்தது. ஆனால், சொத்துக்கள் மதிப்பு வெளிவரவில்லை.
இந்த தகவலை அறிந்த சஞ்சய் தத், ரசிகையின் அன்பை கண்டு தாம் அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளார். அந்த ரசிகை தமக்கு எழுதிவைத்த சொத்துக்களை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் சஞ்சய் தத் கூறியுள்ளார்.இதனால் பாலிவுட் உலகமே சஞ்சய் தத்தை நெகிழ்ச்சியோடு பார்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.