"ரஹ்மானின் குரல் மேல் காதல் கொண்ட சாய்ரா" கண் கலங்கும் ரசிகர்கள்.!

ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ar rahman wife

சென்னை :ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையிலான 29 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமாம்.

இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “ரஹ்மானின் குரல் மீதுதான் காதல் கொண்டேன் என்று சாய்ரா சொல்ல, பின்னர் அவருக்காக ஒரு பாடல் பட என்று தொகுப்பாளர் கேட்க, அவருக்காக ரஹ்மான் இரண்டு வரிகளை பாடிக் காட்டுகிறார்”. இப்படி இருக்கையில், இந்த ஜோடி பிரிவது வேதனையளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node

பிரிவுக்கான காரணம் என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் 29 ஆண்டுக்கால திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது. பிரிவுக்கான காரணம் குறித்து சாய்ரா கூறியதாவது, தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும், சிரமங்களும் தங்களுக்கிடையே தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி உள்ளதாகவும், வலி, வேதனையால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.