மெகா ஸ்டார் காலில் விழுந்து வணங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

unknown node

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக நேற்று முன்தினம்  ப்ரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ராம் சரண் என பலர் கலந்து கொண்டனர். இதில் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.

unknown node

அப்போது விஜய் சேதுபதி பற்றி சிரஞ்சீவி கூறுகையில் விஜய் சேதுபதி எனது தம்பி போல என பெருமையாக குறிப்பிட்டார். இதனை கேட்டதும் அந்த சமயம் சிரஞ்சீவியின் காலைத்தொட்டு வணங்கினார் விஜய் சேதுபதி. இதற்கு முன்னர் விஜய் சேதுபதி திரையுலகில் யாருடைய காலில் விழுந்து வணங்கியதில்லை என கூறப்படுகிறது. அந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, சிரஞ்சீவி காலில் விழுந்தது திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.