மிஷ்கினுடன் இணையும் பிரேமம் புகழ் சாய்பல்லவி !

நேற்று மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். இதனை ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளாராம்.

நடிகர்  விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் மிஷ்கின் தயாரித்து, வில்லனாக நடித்த ‘சவரக்கத்தி’ சமீபத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகராக மிஷ்கின் கைவசம் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ராம்பிரகாஷ் ராயப்பாவின் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ஆகிய 2 படங்கள் உள்ளது.

நேற்று மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். இதனை ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளாராம்.

இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இதில் ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி, நித்யா மேனன் இருவரும் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.