இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் சாஹோ. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். சுஜித் இயக்கி உள்ளார்.
unknown nodeஇப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 550 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இப்படத்தின் சென்சார் சான்று தற்போது வெளியாகியுளளது. இப்படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. இப்படம் 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.