நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரக்கனி போன்ற பலர் கலந்துகொண்டார்கள்.
unknown nodeஇந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது ” நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவிலே விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அதை இரண்டு நாட்களில் வேற மாதிரி பேசிட்டாங்கள். ஏன் இப்படி மாறி மாறி பேசுறாங்கன்னு புரியவில்லை.
unknown nodeஎந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா..? எனக்கும் என் மகன் விஜய்க்கும் உள்ளது தந்தைக்கும் -மகனுக்குமான பிரச்சனை, குடும்பப் பிரச்சனை. அதில் என் தலையிடுகிறீர்கள்.. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை.
unknown nodeகுடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இது நல்ல மேடை. நல்லதை செய்வோம். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.