ஒரு வழியா சொல்லிட்டார் ராக்ஸ்டார்.! "ரிங்க் டோன்" மாற்ற தயாரா ரசிகர்களே.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் " விக்ரம்".

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

unknown node

படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

unknown node

படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்களோ, அதை அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் பின்னணி இசையில் பூந்து விளையாடி இருப்பார். குறிப்பாக, விஜய் சேதுபதி வரும் அறிமுக காட்சி, சூர்யா வரும் காட்சிகளில் பின்னணி இசையாலே மெய் சிலிர்க்க வைத்திருப்பர் அனிருத்.

unknown node

இந்த நிலையில், படத்தின் OST  எப்போது வெளியாகும் ரிங்க் டோனை மாற்ற காத்திருக்கும் ரசிகர்களுக்கு அனிருத் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, விக்ரம் படத்தின் OST ஜங்க் பாக்ஸ் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node