தல தளபதி ரசிகர்களுக்கு யார்தான் அட்வைஸ் பண்ணுவது? : ஆர்ஜே பாலாஜி
ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பிறகு காமெடியனாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர், வர்ணையாளர் ஆர்ஜே பாலாஜி. இவர் எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் சாட் செய்து ரசிகர்களுடன் ஒரு ரிலேசன்ஷிப் மேற்கொண்டு வருகிறார்.
இவர் அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தல தளபதி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் ‘ஒருத்தன் என்னடானா என் பொண்டாட்டிய விட அஜித்தான் முக்கியம்னு சொல்றான். இன்னொருத்தன் என் விஜய் எங்கள் சாமினு சொல்றானுக. இவங்களுக்கு நான் அட்வைஸ் பண்ணனுமா? அவங்க பெற்றோரர்கள் அட்வைஸ் பண்ணனுமா? இல்லனா அந்தந்த ஸ்டார் அட்வைஸ் பண்ணுமா என தெரியவில்லை’ என பதிலளித்தார்.
source : dinasuvadu.com