நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து“பத்து தல”திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodePathu Thala STR [Image Source: Twitter ]
படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக்.
இதையும் படியுங்களேன்-என்னோட படத்தில் அந்த மாதிரி காட்சிகள் இருக்காது…நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் பெருமிதம்.!
unknown nodeபடத்தில் சிம்பு எ.ஜி.ஆர். எனும் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னதாக இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeSTR Pathu Thala [Image Source: Twitter ]
அதன்படி, தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர்.
unknown node