காதலியை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி! திருமண கிளிக்ஸ் இதோ!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் தன்னுடைய பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து தனக்கென்று ஒரு பாணியை கையில் எடுத்துக்கொண்டு தற்போது பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
இதில் அவர் டாக்டர் படத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இருவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் அவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
ரெடின் கிங்ஸ்லி சங்கீதா இவர்கள் இருவருடைய திருமணம் மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அழைக்கப்பட்டு நடைபெற்றது. சில நெருங்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே இவர்களுடைய திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?
ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டிருக்கும் நடிகை சங்கீதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருவதன் மூலம் பிரபலமானவர் இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவர் ரெடின் கிங்ஸ்லியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லாமல் திருமணத்தின் மூலம் அறிவித்துள்ளார்கள். மேலும், இவர்களுடைய திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக சென்னையில் நடைபெறவுள்ளதாகவும். அந்த விழாவிற்கு அனைத்து பிரபலங்களையும் அழைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடைபெற்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.