ஜாலியாக ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா ஜோடி!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அந்த திரைப்படத்தில் நடித்து தனக்கென்று ஒரு உடல் பாவனையை வெளிப்படுத்தி மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து அடுத்ததாக டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
தொடர்ச்சியாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி பட வாய்ப்புகள் குவிந்து அவர் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நிலையில், இத்துடன் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக அவர் சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டும் வருகை தந்திருந்தார்கள். விரைவில் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் ரெடின் கிங்ஸ்லி திட்டமிட்டு இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அனைத்து பிரபலங்களையும் அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் ஹனிமூனை கொண்டாட கிளம்பியுள்ளார். தனது அன்பு மனைவியுடன் ஹனிமூனை கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் இந்த புதுமன தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025