சென்னை :நடிகர் ரவி மோகனின் 34வது படத்தின் தலைப்பையும், டைட்டில் ரீவீல் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்போது ” காரத்தே பாபு” என்று பெயரிடப்பட்டுள்ளது.
டீசரில் தமிழ்நாடு சட்டமன்றம் போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது. இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஷங்கர் ஜிவாலின் மகளும், நடிகருமான தவ்தி ஜிவால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும், சக்தி வாசுதேவன், வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கதைக்களம் பற்றிய விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், காரத்தே பாபு ஒரு அரசியல் படம் என்பதும், ரவி மோகன் முதல் முறையாக அரசியல் கதையில் நடிக்கும் 25 வது படம் என்பதும் டைட்டில் டீசரில் இருந்து தெளிவாக தெரிகிறது.
unknown nodeஇப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, கதிரேஷ் அழகேசன் எடிட் செய்கிறார். கணேஷ் கே பாபுவுடன் இணைந்து ரத்ன குமார் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோர் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
