விழா மேடையில் ஒலித்த ரஞ்சிதமே பாடல்.. ரசிகர்களை வியக்க செய்த ராஷ்மிகா மந்தனா.!

ராஷ்மிகா மந்தனா :  கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி என்கிற இடத்தில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற ஒரு பதவியேற்பு நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனா

Ranjithame - Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா :கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி என்கிற இடத்தில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற ஒரு பதவியேற்பு நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனா பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஹெலிகாப்டர் மூலம் கேரளாவிற்கு வருகை தந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, பாரம்பரிய புடவையில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

அதே நேரத்தில் நடிகை ராஷ்மிகாவை காண 2000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடினர். நடிகையை வரவேற்கும் விதமாக விழா மேடையில்,  ரஷ்மிகா மந்தனா நடித்த பல பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில், தளபதி விஜய் உடன் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதாமே’க்கு அவர் நடனமாடி, பார்வையாளர்களை அசத்தினார்.

வைரலான வீடியோவில் அவர் ஒரு அழகான பச்சை நிற சேலையில் தோன்றி தலையில் ரோஜா பூ உடன் அனைவரது இதயங்களை கொள்ளையடித்தார். ‘ரஞ்சிதாமே’ பாடலுக்கு நடனமாடும் ரஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா இப்போது அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் இருக்கிறார். இதை தவிர பல சுவாரஸ்யமான படங்களில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கடைசியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.