ரஜினிகாந்த் பிறந்த நாள் ட்ரீட்: தலைவர் 170 படத்தின் தலைப்பு அறிவிப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை

Thalaivar 170 Title Teaser

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கான தலைப்பு என்னவென்பது குட்டி டீசருடன் அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தின் தலைப்பு என்னவென்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த தலைப்பு டீசரில் அனிருத் உடைய பின்னணி இசை வருகிறது. அத்துடன் ரஜினி  சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் இருக்கும் புத்தம் ஒன்றை படிக்கிறார்.

பிறகு கெத்தாக நடந்து சென்று துப்பாக்கியுடன் பேசும் வசனங்களும் வருகிறது.  அத்துடன் படத்திற்கு தலைப்பு வேட்டையன் என்று வருகிறது. இந்த சின்ன டீசரை பார்க்கையிலே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகாமாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்கள்!

இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய 171-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.