ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்தளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் மீண்டும் பழைய ரஜினியை ஞாபகபடுத்தும் விதமாக இருந்தது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படத்தின் முதல் காட்சியில், ரஜினி நான் வீழ்வேன் என நினைத்தாயோ என தனது முதல் வசனத்தை பேசியிருப்பார். ஆனால் அதே வசனம் மகாநதி படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் பேசியிருப்பார். இதனை ஓரு கமல் ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
unknown node