சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் ட்ரெய்லர் வரும் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Vettaiyan trailer

சென்னை :இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் (அக்டோபர் 2ஆம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது, வெளியிடப்பட்ட வேட்டையன் படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிலர் டீசர் ரஜினியின் முந்தைய படங்களான ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ போல் உள்ளதாக விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடியாக ட்ரெயிலர் இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, வேட்டையன் ஹிட் பாடலான “மனசிலாயோ” பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையனில் அமிதாப் பச்சன், சத்யதேவ், ஃபகத் பாசில் பேட்ரிக், ராணா டக்குபதி நட்ராஜ், மஞ்சு வாரியர், தாராவாக ரித்திகா சிங், ரூபா, கிஷோர், ஹரிஷ் என ஒருபெரிய குழுமமே நடித்துள்ளனர்.

unknown node