டெட்டோல் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பி.வி.ஆர் திரையரங்கம்!

பாதுகாப்பு கலந்த சுகாதாரத்துக்காக டெட்டோல் நிறுவனத்துடன் சென்னை பி.வி.ஆர் திரையரங்கம் இணைந்துள்ளது.

பாதுகாப்பு கலந்த சுகாதாரத்துக்காக டெட்டோல் நிறுவனத்துடன் சென்னை பி.வி.ஆர் திரையரங்கம் இணைந்துள்ளது.

சென்னையின் பிரபலமான திரையரங்காகிய பிவிஆர், சினிமா திரை உலகில் உள்ள விருந்தினர்களுக்கு மேம்பட்ட சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு நெறிமுறைகளை நாடு முழுவதிலும் 70 நகரங்கள் மற்றும் 175 இடங்களில் செயல்படுத்துவோம் என அண்மையில் உறுதி எடுத்துக்கொண்டது. இந்நிலையில் சுகாதாரத்திற்காக தற்பொழுது இவர்கள் டெட்டால் கிருமிநாசினி நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும் சுகாதாரமான அணுகுமுறையும் கொண்டுள்ளதால், டெட்டோல் தங்களுக்கும் தங்களுடைய முடிவுக்கும் நன்மையானது என கூறியுள்ளனர். இந்நிலையில், திரையரங்கின் உரிமையாளர் கௌதம் தத்தா கூறுகையில், அவரது வாடிக்கையாளர்கள் திரைப்படங்களுக்கு  செல்லும் பொழுதும் மீண்டும் திரும்பும் முழுதும் பாதுகாப்பான மற்றும் சிறந்த நடைமுறைகளை கொண்டுவர வேண்டுமென ஏற்கனவே தொழில் துறையில் உள்ள உலகத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக கூறியுள்ளார். மேலும் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெட்டோல் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பி.வி.ஆர் திரையரங்கம்!