புஷ்பா படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டர் வெளியீடு.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்குகிறார். படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.
unknown nodeஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.
unknown nodeமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த முதல் பாகம் வரும் டிசம்பர் 25 – ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அவர் ஸ்ரீவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் இதுவரை இல்லாத விதமாக கிராமத்து பெண்ணாக இருக்கிறார்.
#Srivalli song release works in progress! More details soon ❤️????????#SoulmateOfPushpa#PushpaTheRise#ThaggedheLe#Pushpa @alluarjun @iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @PushpaMovie pic.twitter.com/sigDgenvxY
— Mythri Movie Makers (@MythriOfficial) September 29, 2021