ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு...போலீசாருக்கு காயம்.!வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு...!

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு விஜய்,தில் ராஜு, வம்சி, தமன், அனிருத், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தந்துள்ளார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில்  கூடினார்கள். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களும், போலீசார் பலரும் அந்த இடத்தில குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி இருந்தும்,இவர்களையெல்லாம் மீறி விஜய் ரசிகர்கள் பலரும் வேகமாக உள்ளே சென்றதால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களுக்கிடேய தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டுள்ளது.

unknown node