தேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்!இல்லை என கூறுகிறார் இயக்குனர்

This news gives information about Producer says that Devarattam is a caste film! director says No caste film

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் மே1 வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று தேவராட்டம் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் வைத்தனர். இப்போது பேசிய இயக்குனர், இது சாதிபடம் அல்ல .முழுக்க முழுக்க அக்கா தம்பி பாசம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஆறு அக்காக்கள் தான் தம்பிக்கு வரும் பிரச்சனையில் இருந்து எப்படி காப்பாற்றி வருகிறார்கள் என இப்படத்தில் சொல்லி இருக்கிறான் என்றார்.

கடைசியாக பேசிய தயாரிப்பாளர் கே .ஈ ஞானவேல் இப்படம் சாதி படம் தான் என்றார். இயக்குனர் திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறார் என்றார்.படத்தின் தலைப்பை பார்க்கும் போது தெரிகிறது இது சாதி படம் என்று . அப்படி இருக்கையில் இப்படம் சாதி படம் இல்லை என ஏன் மறுத்து பேசுகிறார் என்று தான் எனக்கு புரியவில்லை என கூறினார்.

unknown nodeunknown node