அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வந்த திரைப்பம் “லத்தி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
unknown nodeஇந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிந்துள்ளது. அடுத்தாக படத்தின் இறுதிக்கட்ட கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeபடத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியகிறது.
unknown nodeமேலும், படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அடுத்தாக முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசை யுவன் என்பதாலும், இதுவரை யுவன்-விஷால் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.