பிரபாஸ் 21 ல், தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராதே ஷியாம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த பிரமாண்ட படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பிரபாஸின் 21வது படம் என்பது ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.இது வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் 50வது படமாகும் .மேலும் பிரபாஸின் 21வது படத்தை நாக் அர்ஜுன் இயக்குகிறார். இவர் கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node