துப்பாக்கியுடன் வெளியாகியுள்ள ஜோதிகாவின் அடுத்த பட போஸ்டர்! தயாரிப்பு சூர்யா!

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் நடிகைகளாக வலம் வந்து பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிதான் சூர்யா - ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர்

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் நடிகைகளாக வலம் வந்து பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிதான் சூர்யா – ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்கை ஆரம்பித்த்தார் நடிகை ஜோதிகா.

unknown node

ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜோதிகா – ரேவதி நடித்து வரும் ஜேக்பாட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து பொன்மகள் வந்தாள் எனும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யா தனது பட நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை பிரீட்ரிக் என்பவர் இயக்க உள்ளார். இபபடத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இதில் துப்பாக்கி மட்டும் இருந்தது. படம் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.