இந்திய விமான படை தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து.....!!!

This cinema news gives information about poet vairamuthu praised for the attack on indian air force - indiya raanuvaththai paaraattiya kavignar vairamuththu

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 200 மேற்பட்ட தீவிரவாதிகள் மரணமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், போர் மீது விருப்பமில்லை. ஆனால் தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும், ஆகாய வீரர்களே, அசாகய சூரர்களே அண்ணார்ந்து பார்த்து வணக்கம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.