நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பதாக சுபஸ்ரீ என்ற இளம்பெண், இந்த பேனரால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கண்ட இடங்களில் பேனர் போஸ்டர் வைப்பதை முறைப்படுத்த வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.
unknown node