சூப்பர் ஸ்டாரின் பேட்ட ட்ரெய்லரில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நவாசூதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்பட்த்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லர் ரசிகய்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த ட்ரெய்லரில் சூப்பர் ஸ்டார் மிக இளமையாகவும், ஸ்டைல்கவும் தோற்றமளிக்கிறார். இதில் விஜய் சேதுபதியும், நவாசுதீன் சித்திக்கும் வில்லன்களாக வருகின்றனர். பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் மாணவர்களாகவும், சிம்ரன் சமகால ஹீரோயினாகவும், த்ரிஷா ப்ளாஸ்பேக் ஹீரோயினாக நடிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக அறிமுகமாகிறார். பின்பு அதிரடி சண்டைக்காட்சிகளும், மாஸ் பஞ்ச் வசனங்களும், இடம்பெற்றுள்ளன. ப்ளாஸ்பேக் காட்சிகள் கிராம பிண்ணனியில் உள்ளது. அந்த போர்ஷன் பழைய ரஜினி வெறியர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்