தடைகளை தாண்டுவது உங்களுக்கு புதிதல்ல! தர்சனை தட்டி கொடுத்த அவரது வாத்தியார்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில்

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து இளைஞனான தர்சன், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் தனது வேலையை காட்ட துவங்கினார்.

இந்நிலையில், தர்சனின் வாத்தியாரான துசிதரன் அவரிடம் பேசுகிறார். அவர் பேசுகையில், முதலில் நலம் விசாரிக்கிறார். அதன் பின் சின்னவயசுல வயதுக்கே உரித்தான குறும்பு தனத்துடன் பார்த்த உங்களை, இன்று அறிவும், அனுபவ முதிர்வும், தன்னம்பிக்கையும் உள்ள இளைஞனாக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையை தேர்வு செய்தாலும், அதிலே சிறந்து விளங்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. தடை தாண்டல் என்பது உங்களுக்கு புதிதல்ல. தடைகளைத் தாண்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதனை கேட்ட தர்சன் கண்கலங்குகிறார்.

unknown node