நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார் : நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரின் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோடி கடற்கரையில் குப்பைகளை தானே அகற்றினார்.
இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனும் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை பாராட்டி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார். தனது கையாலேயே மாமல்லபுரக் கடற்கரையில் இருந்த குப்பைகளை மோடி அகற்றியது உத்வேகத்தை அளிக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நம்மக்கு இருப்பதை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.’ என்று பதிவிட்டுள்ளார்.
Our PM always leads by example. Seeing Modi ji single-handedly clear out the plastic-waste while walking on the Mamallapuram beach is inspiring. It’s a reminder to each of us to renounce the use of single-use plastic.#SwachhBharat @narendramodi @PMOIndia https://t.co/KjaqJYQHxx
— Ajay Devgn (@ajaydevgn) October 14, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025