திரையரங்கு ஆக்கிரமிப்பு.. 'லப்பர் பந்து' படத்தின் OTT ரிலீஸ் ஒத்திவைப்பு.?

கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதனால், OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

lubber pandhu ott release date

சென்னை :அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படம் நாளை (அக். 18) OTT-ல் வெளியாகவிருந்தது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை பெற்றிருக்கும் Simply South நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக இயங்கி வருவதால், அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

unknown node

இந்த படத்தில், தினேஷ் மற்றும் ஹரிஷ் தவிர , படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.