சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது என்று சொல்லலாம். அப்படி காத்திருந்ததற்கு முக்கியமான காரணமே படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சிக்ஸர் விளாசியது தான். படத்தின் கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எனத் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது […]
சென்னை : அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் நாளை (அக். 18) OTT-ல் வெளியாகவிருந்தது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை […]
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பாராட்டுவதோடு கிரிக்கெட்டைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் படத்தை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே, இந்த படத்தைப் பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் […]
சென்னை : இப்போது எங்குப் பார்த்தாலும் “லப்பர் பந்து” திரைப்படத்தைப் பற்றித் தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு அருமையான படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்திருக்கிறார். படம் வெளியான போது பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியானது. அதன்பிறகு, படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த காரணத்தால் நாளுக்கு நாள் வரவேற்பு குவிந்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எளிமையாக, எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரையும், உலகம் முழுவதும் 14 கோடி […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொழுதுபோக்குக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல படங்கள் வெளியானால் அதனை, பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியது இல்லை. அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் என்றால், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த கோட் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெரிய வரவேற்பைப் பெற்று வரும் லப்பர் பந்து […]
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் […]
சென்னை : கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் முதன் முதலாக ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கவிருந்தார்.படத்தில் அவர் நடிக்கவுள்ள லுக்கிற்கான போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடபட்டிருந்தது. ஆனால், திடீரென ஹரிஷ் கல்யாணுக்கு பதில் அந்த படத்தில் கவின் நடிக்கிறார் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கவின் நடிக்கிறார் என்றவுடன் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமானது என்று கூட சொல்லலாம். படமும் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. இருப்பினும், இந்த படத்தில் இருந்து என்ன […]
சென்னை : பார்க்கிங் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் பார்க்கிங் படத்தை சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு, ரமா, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் இருவருக்கும் ஏற்பட கூடிய பிரச்னையை கதையாக […]
கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை மிஸ் பண்ணிடீங்க என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஸ்டார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தினை இயக்கி இருந்த இளன் தான் இயக்கி இருந்தார். முதன் முதலாக ஸ்டார் படத்தையும், இளன் ஹரிஷ் கல்யாண் […]
இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான பல படங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஒன்று. இந்த பார்க்கிங் திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் […]
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர் என ஒட்டுமொத்த சென்னையுமே, மழைநீரில் தத்தளித்தது. மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நேற்று முதல் சென்னை நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதால், மக்கள் […]
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். […]
பார்க்கிங் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளது என பேசிய இயக்குனர் லோகேஷ் தெரிவிக்க, அதே மேடையிலேயே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பதிலளித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும, […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பார்க்கிங் படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்த […]
இயக்குனர் இளன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துபோனதாம். அதனால், அதனை தயாரிக்க மற்ற தயாரிப்பார்களிடம் கூறி சிபாரிசு செய்கிறாராம். ஹரிஷ் கல்யாண், ரைசா வில்லியம்சன் நடித்து யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்த திரைப்படம் பியர் பிரேமா காதல். இந்த படத்தை இளன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யானை வைத்து ஸ்டார் எனும் திரைப்படத்தை தொடங்கினார். […]
இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தில் ரைசா வில்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஹரிஷ் கல்யாணிற்கு கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் பிரபலமாக்கியது. பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் ஜோடியாக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் […]
நடிகர் ஹரிஷ் கல்யாணின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதனையடுத்து பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பல ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான ரைசாவுடன் இணைந்து பியார் பிறேமா […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் டிக்டாக்கில் 100மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு . அனிருத் இசையமைப்பில் […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது […]