இன்று வெளியாகும் "ஓ மண பெண்ணே" மோஷன் போஸ்டர்...!

Composer Anirudh will release the motion poster for the movie O Mana Penne starring Harish Kalyan at 5 pm today.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மண பெண்ணே படத்திற்கான மோஷன் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார்.

தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் ரீமேக் செய்கிறார்.

இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு படத்திலிருந்து படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டும் வெளியிட்டனர்.

அதற்குப் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் விடாமல் இருந்ததை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டரை இன்று மாலை இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார்.