எவ்வளவு பணம் புகழ் சம்பாதித்தாலும், பழைய நண்பர்கள் மிகவும் முக்கியம்!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில்,  ரஜினிகாந்த் தனது நண்பரான இயக்குனர் பாரதிராஜா குறித்து கூறுகையில், இயக்குனர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது, தலைவர் என்று தான் அழைப்பார். பாரதிராஜாவுக்கு எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் நட்பு மாறாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்று பாரதிராஜா அடிக்கடி கூறுவார். எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் பழைய நண்பர்கள் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்