இன்று வெளியாகிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்.!வெளியான புது போஸ்டர்.!

The teaser of Vijay Sethupathi's 'Yaadhum Oore Yaavarum Kelir ' will be released today at 6 pm with a new poster.

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக புது போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர்.எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன்,யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக புது போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node