சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு புதிய சிக்கல் ‌! படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்.!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விலங்குகள் நல

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை பிடித்து பைக்குள் போடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழுள்ள ஒரு உயிரினத்தை வைத்து படம் பிடிப்பது குற்றம் என்றும் ,பொதுவாக பாம்பின் பல்லை எடுத்த பின்னரோ அல்லது அதன் வாய் ஒட்டப்பட்ட பின்னரோ தான் சினிமாவில் பயன்படுத்துவார்கள் .இந்நிலையில் சிம்பு வனவிலங்கை துன்புறுத்தி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக அவரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேளச்சேரி வனத்துறை அலுவலகத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் புகார் செய்திருந்தார்.

அதனையடுத்து ஈஸ்வரன் படக்குழுவினரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .அதன் பின்னர் ஈஸ்வரன் படத்தில் காட்டப்பட்டது நிஜ பாம்பு இல்லை என்றும், அது கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக காட்டப்பட்டது என்றும் இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது படத்தில் பாம்பு காட்சிகளை பயன்படுத்த விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.அது இல்லாமல் பாம்பு காட்சியை படத்தில் பயன்படுத்தியது சட்டத்திற்கு புறம்பானது . விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியின்றி படத்தில் பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து இன்னும் 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனுடன் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை ஷேர் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

unknown node