தடையில்லா சான்று தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா! தனுஷ் பெயர்?

தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

dhanush nayanthara

சென்னை :நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் மிகவும் அவருக்கு உணர்வுபூர்வமான ஒன்று என்பதால் அதனை வீடியோவாக எடுத்து ஒரு குறும்படம் போல எடிட் செய்து நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் முன்னதாகவே அறிவித்து இருந்தார்.

அவருடைய திருமண வீடியோNayanthara Beyond The Fairy Taleஎன்ற பெயரில் சமீபத்தில் நவம்பர் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்பதால் நேரடியாக அவர் மீது குற்றம்சாட்டு வைத்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியீட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் தடையில்லா சான்று தராத நிலையில் நன்றி தெரிவித்த அவர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் பட்டியலில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை.

தமது ஆவணப்படம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஷாருக் கான் உள்ளிட்டோர் பெயரை குறிப்பிட்டு  நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், நயன்தாரா நன்றி தெரிவித்து வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் தனுஷ் பெயர் இல்லாதது மீண்டும் இந்த பிரச்சினை மீண்டும் பேசப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

unknown node