37வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது நயன்தாராவின் அடுத்த 'திரில்லர்' கனெக்ட்.!

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தின் முதல் போஸ்டர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தின் முதல் போஸ்டர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 37வது பிறந்தநாளை காலகாலமாக கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாரா நடிக்கும் படங்களில் இருந்து வாழ்த்தும் வந்துகொண்டிருக்கிறது.

unknown node

அந்த வரிசையில், அவர் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு மாயா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்க உள்ளார். கனெக்ட் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் சார்பில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.

அஸ்வின் சரவணன் ஏற்கனவே இயக்கிய மாயா, கேம் ஓவர் படம் போல திரில்லர் கதைக்களத்துடன் கனெக்ட் திரைப்படம் தயாராக உள்ளதாக தெரிகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

37வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது நயன்தாராவின் அடுத்த 'திரில்லர்' கனெக்ட்.!