முதலில் நயன்தாராவிடம் பேச எனக்கு பயமாக இருந்தது.ஏன் என்றால் அவர் மிகப்பெரிய ஸ்டார் என்பதால் இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக மாறி விட்டார்.
தென்னிந்தியா சினிமாவில் நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த “மாயா ” “டோரா “ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான “ஐரா” ரசிகர்களிடம் சிறந்தபாராட்டுகளையும் பெற்றது.
“ஐரா” படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருப்பவர் நடிகர் கலையரசன். இவர் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். “ஐரா” படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.
அதில், “முதலில் நயன்தாராவிடம் பேச எனக்கு பயமாக இருந்தது.ஏன் என்றால் அவர் மிகப்பெரிய ஸ்டார் என்பதால் இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக மாறி விட்டார்.
அதனால் நான் நயன்தாரா என்பதை சில சமயங்களில் மறந்துவிடுவேன்” என கூறியுள்ளார்.